பாமாலை · Hymn386

சர்வத்தையும் அன்பாய்

Now thank we all our God

Projector

Lyrics

1
சர்வத்தையும் அன்பாய்காப்பாற்றிடும் கர்த்தாவைஅநேக நன்மையால்ஆட்கொண்ட நம் பிரானைஇப்போது ஏகமாய்எல்லாரும் போற்றுவோம்மா நன்றி கூறியேசாஷ்டாங்கம் பண்ணுவோம்.
2
தயாபரா, என்றும்எம்மோடிருப்பீராக;கடாட்சம் காண்பித்துமெய் வாழ்வை ஈவீராகமயங்கும் வேளையில்நேர்பாதை காட்டுவீர்;இம்மை மறுமையில்எத்தீங்கும் நீக்குவீர்.
3
வானாதி வானத்தில்என்றென்றும் அரசாளும்திரியேக தெய்வத்தைவிண்ணோர் மண்ணோர் எல்லோரும்இப்போதும் எப்போதும்ஆதியிற் போலவேபுகழ்ந்து ஸ்தோத்திரம்செலுத்துவார்களே.
386 சர்வத்தையும் அன்பாய் — Tamil Pamalai