பாமாலை · Hymn515
1
என் இயேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்;வேறெந்த வீண் வாழ்வையும் நாடாதிருப்பேன்;உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன்;என் நாதா! மென் மேலும் உம்மை நேசிக்கிறேன்.
2
இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்;நீர் ஜீவனை தியாகம் செய்து மீட்டுக் கொண்டீர்;முட் கிரீடம் ஐங்காயமும் தியானிக்கிறேன்;என் நாதா! மென்மேலும் உம்மை நேசிக்கிறேன்.
3
பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்;எப்போதும் உம்மோடு தங்க வாஞ்சிக்கிறேன்;என் ஜீவனே போயினும் நான் நீங்க மாட்டேன்;என் நாதா! மென் மேலும் உம்மை நேசிக்கிறேன்.
4
பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங் கொள்வேன்;நீடுழி! உம் முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்;எப்பாவ மில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்;என் நாதா! மென்மேலும் உம்மை நேசிக்கிறேன்