பாமாலை · Hymn516
என் உள்ளமே கர்த்தாவை
My soul now bless thy Maker
1
என் உள்ளமே கர்த்தாவைஆவலாய்த் துதித்துஎன் ஆவியே, தெய்வன்பைஎப்போதும் போற்றிடு;உன் பாவத்தை மன்னித்துஉன் கேட்டை நீக்கினார்;உன் ஜீவனை ரட்சித்து,நர் சீர் அளிக்கிறார்.
2
மகா இரக்கமானசகாயர் கர்த்தர் தான்;நொறுங்குண்டோருக்கானஅருளின் ஊற்றேயாம்;கோபத்தை என்றென்றைக்கும்என் தேவன் கொள்ளாரே,மனம் நருங்குண்டோர்க்கும்கிருபை செய்வாரே.
3
தந்தை தன் மைந்தருக்குஇரங்கும் வண்ணமாய்,கர்த்தர் தம் தாசருக்குஇரங்குவார் மெய்யாய்;நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணும் என்றுஅறிந்திருக்கிறார்.
4
கர்த்தரின் வேதம் சொல்லும்ப்ரமாணப்படியேஇசைந்து அவர் காட்டும்அன்புக்கு ஏற்கவேநடந்து கொள்வோர்க்குக்கடாட்சம் அருள்வார்பரமானந்தத்துக்குஆளாக்கி ரட்சிப்பார்