பாமாலை · Hymn514

இக்கட்டை மா அன்பாக

My inmost heart now raises

Projector

Lyrics

1
இக்கட்டை மா அன்பாகநீர் போன இரவில்விலக்கினத்திற்காகத்துதிப்பேன் கர்த்தரேஆ இந்த நாள் வரைக்கும்நான் செய்த தீமைக்கும்எல்லாப் பிழைகளுக்கும்மன்னிப்பை அருளும்
2
தேவாவியால் மெய்யாகரட்சிப்பின் நம்பிக்கைஎன் ஆவிக்கே உண்டாகநீர் தேவ நேசத்தைஅடியேன் நெஞ்சில் ஊற்றிபிறரை நேசிக்கும்நேசத்தை அதில் மூட்டிமென்மேலும் வளர்த்தும்
3
மகா பொல்லாங்கானபிசாசு தனதுவிஷமும் கேடுமானவினையால் எனக்குப்பொல்லாங்கு ஒன்றும் இன்றுசெய்ய விடாதிரும்நான் ஜெயங் கொள்வதற்குச்சகாயம் செய்திடும்
4
சர்வத்துக்கும் மா வல்லகர்த்தாதி கர்த்தரேகுறைவில்லாத நல்லவிசாரிப்புடனேஉம் சித்தம் நிறைவேறநீர் என்னை நடத்தும்அப்போதெல்லாம் நன்றாகஎனக்கு முடியும்
514 இக்கட்டை மா அன்பாக — Tamil Pamalai