பாமாலை · Hymn54

வாசல்களை உயர்த்துங்கள்

Lift up your heads (Macht hoch die Thur)

Projector

Lyrics

1
வாசல்களை உயர்த்துங்கள்மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்ராஜாதி ராஜா வருவார்,பெரிய தெய்வ மைந்தனார்.உலகத்தைச் சிருஷ்டித்துரட்சித்த தேவரீருக்குதுதி, தயாபராஆலோசனைக் கர்த்தா.
2
அவர் மா சாந்தமானவர்,சகாயர் நீதியுற்றவர்,ராஜாவின் முடி சுத்தமே,அவர் செங்கோல் இரக்கமே;இக்கட்டை நீக்கினார் அன்பாய்புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்துதி, மா கர்த்தரே,பலத்த மீட்பரே.
3
இக்கர்த்தர் உட்பிரவேசிக்கும்போதெந்த ஊரும் தேசமும்களிக்கும், எங்கள் இதயம்அடைவதும் மெய்ப் பாக்கியம்அவர் சந்தோஷப் பொழுதே.மகிழ்ச்சியை அளிப்பாரே;ஆ, தேற்றும் உமக்கேபுகழ்ச்சி, கர்த்தரே.
4
வாசல்களை உயர்த்துங்கள்நெஞ்சை அலங்கரியுங்கள்பக்தியின் குருத்தோலையும்மகிழ்ச்சியின் கிளைகளும்தெளியுங்கள், ராஜா வாறார்,உங்களையும் இரட்சிப்பார்கர்த்தாவுக் கென்றைக்கும்புகழ்ச்சி துதியும்.
5
என்னண்டை இயேசு, வாருமேன்,என் வாசலைத் திறக்கிறேன்அருள் புரியும் தேவரீர்என் நெஞ்சில் தங்கக்கடவீர்மோட்ச வழியைக் காண்பிக்கும்நல் ஆவியைத் தந்தருளும்என்றைக்கும் உமக்கேபுகழ்ச்சி, கர்த்தரே.
54B வாசல்களை உயர்த்துங்கள் · Bavarian 112 — Tamil Pamalai