பாமாலை · Hymn646
மா பொல்லாப்பை நடப்பித்தேன்
Lord to Thee I make confession
1
மா பொல்லாப்பை நடப்பித்தேன்பாவக் கேடு மிஞ்சிற்று,நல்வழியை விட்டு விட்டேன்அத்தால் இப்போதுமதுகோபத்துக்குப் பயமாகநிற்கிறேன் திகைப்புமாக.
2
நான் கடலைத்தான் கடந்தும்,ஆழத்தில் இறங்கியும்காற்றின் வேகமாய்ப் பறந்தும்எவ்விடத்திலாகிலும்தப்பேன், என்னை எந்தத் திக்கும்தேவரீரின் கை பிடிக்கும்.
3
ஆகையால் என் பாவங்கண்டஉம்மைத்தான் பணிகிறேன்;பிள்ளைப் பாக்யத்தை இழந்தபாவிமேல் இரங்குமேன்:என் திரள் பொல்லாப்புக்காகஎன்மேல் கோபங்கொள்வீராக
4
மா கடற்கரை மணலைஎண்ணத் தக்கதாகியும்என் பிழைகளின் திரளைஎண்ணி, என் மேல் சுமரும்குற்றங்களினால் உண்டாகும்தீங்கை சொல்ல யாராலாகும்.
5
அழுங்கள், பொங்காரமாகஎன் இரண்டு கண்களேமிகவும் என் பிழைக்காகஅழ என் தலையிலேகண்ணீர் ஊற்றுத் திறவுண்டுஓட எனக்காசையுண்டு.