பாமாலை · Hymn644

பெலவீனரின் பெலனும்

Jesus strength of hearts despondent

Projector

Lyrics

1
பெலவீனரின் பெலனும்துக்கப்பட்டிருக்கிறபாவிகளுக்குத் திரனும்வைத்தியருமாகியஇயேசுவே, என் எஜமானே,கேட்டை நீக்கும் பலவானே.
2
என் இதயம் ஜென்ம பாவம்ஊறிய ஊற்றானது,முழுவதும் என் சுபாவம்நன்மையை விரோதித்து,பாவத்தின் விஷத்தினாலும்நிறையும் துர் இச்சையாலும்.
3
ஆன்மாவின் பகைஞராலேகாயப்பட்டுப்போன நான்உம்மிடம் மா வாஞ்சையாலேஓடி சேருமுன்னேதான்பேய் தன் கூட்ட்த்துடனேயும்என்னில் மீண்டும் தன் அம்பெய்யும்.
4
செய்ய வேண்டிய ஜெபத்தைசோம்பல் மறிக்கின்றது,உமதாவி என் ஆன்மாவைநன்மைக் கேவுவதற்குவரும் போதெதிர்த்திருக்கும்சரீரம் அதைத் தடுக்கும்.
5
ஜென்ம பாவிகளுக்கானபரிகாரி, இயேசுவே,என்றும் நான் இவ்வாதையானகேட்டைத் தாங்கமாட்டேனே.ஆ, என் பேரிலே இரங்கும்.உம்மால் கேடெல்லாம் அடங்கும்.
644 பெலவீனரின் பெலனும் — Tamil Pamalai