பாமாலை · Hymn643

இயேசுவே எத்தன்மையான

Jesus how much sin is in me

Projector

Lyrics

1
இயேசுவே எத்தன்மையானகேடும் என்னில் இல்லையோ,ஆதாமுடைய வித்தானதுர்க்குணத்தான் அல்லவோ,பாவி நான் என்றடியேனும்வெட்கத்தோடே சொல்ல வேண்டும்.
2
என் வழிகள் தாறுமாறுஎன் குணம் பொல்லாதது,அது நன்மைக்குதவாதுதீமைக்கோ மா விரைவுஎன் மனம் தீதால் உண்டாகும்கேட்டுக்கெப்போ நீங்கலாகும்.
3
என்னை உமதாவியாலேநீரே மாற்றி, யாவையும்மகா இரக்கத்தினாலேஎன்னில் மாட்சியருளும்,பழைய மனிதன் சாகதுர்ச்சீர் யாவும் போவதாக.
4
பாவத்தால் நான் இங்கே தாழசெத்தோனாய்க் கிடக்கிறேன்;தீய மனம் என்னில் மாறஜீவனுகே அடியேன்ஏங்குகின்றேன், தயவாகஎன்னை உயிர்த்தாள்வீராக.
5
உலகத்தின் இச்சையாலேதீட்டென்மேல் வராமல் நான்ஆவியின் நற்பலத்தாலேஅதை வெல்வதற்குத்தான்புது நெஞ்செனக்குண்டாக்கும்ஆவியைப் பலமாக்கும்.
643 இயேசுவே எத்தன்மையான — Tamil Pamalai