பாமாலை · Hymn71

மெய் பக்தரே நீர்

Christians awake salute

Projector

Lyrics

1
மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்.
2
இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே.
3
அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடி, இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.
4
இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்குஅற்புத காட்சி காண விரைந்து,யோசேப்புடன் தாய் மரியாளையும்முன்னணைமீது தெய்வ சேயையும்கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்.
5
கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்அன்போடு தியானம் செய்து வருவோம்,நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்.
6
அப்போது வான சேனைபோல் நாமும்சங்கீதம் பாடலாம் எக்காலமும்;இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;நம் ராயன் அன்பால் ரட்சிப்படைந்தோம்;அவரின் நித்திய துதி பாடுவோம்.
71 மெய் பக்தரே நீர் — Tamil Pamalai