பாமாலை · Hymn69

மகிழ்ச்சி பண்டிகை

The happy Christmas comes

Projector

Lyrics

1
மகிழ்ச்சி பண்டிகை கண்டோம்,அகத்தில் பாலனைப் பெற்றோம்;விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,விண் எட்டும் மகிழ் பெற்றனர்.
2
மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,ஆ! வான மாட்சி துறந்தார்;சிரசில் கிரீடம் காணோமே,அரசின் செல்வம் யாதுமே.
3
பார் மாந்தர் தங்கம் மாட்சியும்ஆ! மைந்தா இல்லை உம்மிலும்;விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்புல்லணை கந்தை போர்த்தினீர்.
4
ஆ! இயேசு பாலன் கொட்டிலின்மா தேசு விண் மண் தேக்கவே,நள்ளிருள் நடுப் பகலாம்,வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.
5
ஆ! ஆதி பக்தர் தேட்டமே!ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.
6
பண்டிகை இன்றே வருவீர்,திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.
69 மகிழ்ச்சி பண்டிகை — Tamil Pamalai