பாமாலை · Hymn89
என் நெஞ்சம் நொந்து
When wounded sore the stricken heart
1
என் நெஞ்சம் நொந்து காயத்தால்அவஸ்தைப்படவே,குத்துண்ட மீட்பர் கரத்தால்அக்காயம் ஆறுமே.
2
தீராத துக்கம் மிஞ்சியேநான் கண்ணீர் விடினும்நோவுற்ற இயேசு நெஞ்சமேமெய் ஆறுதல் தரும்.
3
என் மனஸ்தாபத் தபசால்நீங்காத கறையும்வடிந்த இயேசு ரத்தத்தால்நிவிர்த்தியாகிடும்.
4
என் மீட்பர் கரத்தால் சுகம்,செந்நீரால் தூய்மையாம்என் இன்பதுன்பம் அந்நெஞ்சம்அன்பாய் உணருமாம்.
5
அக்கரம் நீட்டும், இயேசுவேஅவ்வூற்றைத் திறவும்;குத்துண்ட உந்தன் பக்கமேஎன்றன் அடைக்கலம்.