பாமாலை · Hymn125

இயேசு உயிர்த்தெழுந்ததால்

Jesus Lives

Projector

Lyrics

1
இயேசு உயிர்த்தெழுந்ததால்,சாவின் பயம் அணுகாதுஉயிர்த்தெழுந்தார் ஆதலால்சாவு நம்மை மேற்கொள்ளாதுஅல்லேலூயா!
2
உயிர்த்தெழுந்தார்! மரணம்நித்திய ஜீவ வாசல் ஆகும்இதினால் பயங்கரம்சாவில் முற்றும் நீங்கிப்போகும்அல்லேலூயா!
3
உயிர்த்தெழுந்தார்! மாந்தர்க்காய்ஜீவன் ஈந்து மாண்டதாலேஇயேசுவை மா நேசமாய்சேவிப்போம் மெய் பக்தியோடேஅல்லேலூயா!
4
உயிர்த்தெழுந்தார்! பேரன்பைநீக்கமுடியாது ஏதும்ஜீவன் சாவிலும் நம்மைஅது கைவிடாது காக்கும்அல்லேலூயா!
5
உயிர்த்தெழுந்தார்! வேந்தராய்சர்வ லோகம் அரசாள்வார்அவரோடானந்தமாய்பக்தர் இளைப்பாறி வாழ்வார்அல்லேலூயா!
125 இயேசு உயிர்த்தெழுந்ததால் — Tamil Pamalai