பாமாலை · Hymn200
கர்த்தாவே பரஞ்சோதியால்
O Thou Who makest souls to shine
1
கர்த்தாவே, பரஞ்சோதியால்ஆன்மாவைப் பிரகாசிப்பிப்பீர்;சீர் அருள் என்னும் பணியாள்உம் அன்பாய்வோரை உய்விப்பீர்.
2
உம் மந்தை சுத்தமாகவும்,விளக்கெல்லாம் இலங்கவும்,போதகர் சபையாருக்கும்வரப்பிரசாதம் அருளும்.
3
விண் ஆள் தாம் முதல் ஆகியே,மற்றோரை ஆங்குயர்த்தவும்,விஸ்வாசம் நம்பிக்கை அன்பேபிரசங்கிப்போர்க்கு ஈந்திடும்.
4
எவ்வேழையான பேர்களும்மேலான ராஜ்யம் சேரவே,கேட்போர்க்குக் கற்க விருப்பம்சற்குணம், சாந்தம், நல்குமே.
5
நிர்பந்த ஆயுள் முழுதும்ஒன்றாய் விழித்திருக்கவே,உம் மேய்ப்பர் மந்தை இரண்டையும்ஆசிர்வதித்துக் காருமே
6
இவ்வாறு அருள் செய்திடில்உம்மில் பிழைத்தும்மில் சாவோம்;இம்மையில் நாங்கள் வாழ்க்கையில்சாவாமையை முன் ருசிப்போம்