பாமாலை · Hymn20
1
கர்த்தாவே மாந்தர் தந்தையே,பேதையோர் பொறுப்பீர்;சுத்தாங்கம் தாரும் நெஞ்சத்தேபக்தோராய்ச் சேவை செய்துமேபணிந்து போற்றிட
2
நன்னாதர் அன்பின் அழைப்பைதட்டாமல் நம்பியேபன்னிரு சீஷர்தாம் உம்மைபின்சென்றவண்ணம் நாங்களும்பின்செல்லச் செய்வீரே.
3
மா கலிலேயா ஓய்வினில்அமைதி குன்றின்மேல்,ஓயாதமைதி ஸ்தலத்தில்ஆ இயேசு நாதா, ஜெபத்தில்அன்பாக அமர்ந்தீர்.
4
உம் சாந்த ஆவி ஊற்றிடும்எம் உள்ள கோஷ்டத்தில்உளம் வருத்தும் தொல்லையேஒழிந்திட, உம் சாந்தியேஉள் வாழ்க்கை ஊன்றிட.
5
அலைக்கழிக்கும் ஆசையைஅடக்கும் ஆவியால்மா காற்று கம்பம் அக்கினியில்ஆ ஆற்றும் மென்மைச் சத்தமேஅடியார் கேட்கட்டும்.