பாமாலை · Hymn205
கர்த்தர்தம் கிரியை
God is working His purpose out
1
கர்த்தர் தம் கிரியை செய்கிறார்ஆண்டாண்டுகள் தோறுமேகர்த்தர் தம் கிரியை செய்கிறார்அவர் காலம் வருமே;ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே
2
கர்த்தரின் செய்தி கேட்பராம்பூமி எங்கும் உள்ளோரேபக்தர் அச்செய்தி கூறுவார்அவர் வாக்கை கைக்கொண்டேகண்டமே, தீவே, கேட்பீரே,ஆம், அவரின் வார்த்தையேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே
3
கர்த்தரின் கிரியை செய்திடமாந்தரை ஒன்றாக்கிடஅத்தனார் சாந்த பிரபுவின்திவ்விய ராஜ்யம் தோன்றிடதொண்டராம் நாம் என் செய்வதாம்ஆம் விரைந்து வந்திடஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே
4
கர்த்தரின் சுவிசேஷமாம்மகத்தான ஜோதியைஎத்திக்கிலும் பரப்பிடவாரும் ஏற்றும் கொடியைதுண்டிப்போம் பாவம் சாபத்தைஆம் அவரின் ஆவியால்ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே
5
கர்த்தரின் துணையின்றியேவேலை யாவும் வீணாமே;வித்தில் விண்ணுயிர் இல்லையேல்விளைவு நாம் காணோமே(ஆயின்) ஆண்டுகள் செல்ல வந்திடும், ஆம்அவரின் ராஜ்யமேஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்ஆழி ஜலம் போலவே.