பாமாலை · Hymn203
அதோ ஓர் ஜீவ வாசலே
There is a gate that stands ajar
பல்லவி
ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!அவ்வாசல் திறவுண்டதே!பாரேன்! பாரேன்!பார்! திறவுண்டதே.
1
அதோ! ஓர் ஜீவ வாசலே!அவ்வாசலில் ஓர் ஜோதிஎப்போதும் வீசுகின்றதே,மங்காத அருள்ஜோதி,
↻ பல்லவி
2
அவ்வாசலுள் பிரவேசிப்போர்கண்டடைவார் மெய்வாழ்வும்கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்எத்தேச ஜாதியாரும்.
↻ பல்லவி
3
அஞ்சாமல் அண்டிச் சேருவோம்அவ்வாசலில் உட்செல்வோம்எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்கர்த்தாவைத் துதிசெய்வோம்.
↻ பல்லவி