பாமாலை · Hymn213
பெருகு பெருகு
Fahre fort zion fahre fort
1
பெருகு, பெருகு,சீயோனே சன்மார்க்கத்தில்;முற்சிநேகத்தை விடாதே;கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்;அசதிக் குணம் ஆகாதே;நீ இடுக்க வாசற்குட்பட்டுபெருகு, பெருகு.
2
உத்தரி, உத்தரிசீயோனே, இக்கட்டுக்குநீ அஞ்சாமல், சாவுமட்டும்நல்ல உண்மையாயிரு;ஜீவ கிரீடம் லக்காகட்டும்நிந்தை யாவையும் அநுபவி,உத்தரி, உத்தரி.
3
உன்னைக் கா, உன்னைக் கா,சீயோனே, நீ உலகின்வாழ்வை மேன்மையை எண்ணாதேநீ பழைய சர்ப்பத்தின்ஆளுகைக்குக் கீழாகாதே;லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார்உன்னைக் கா, உன்னைக் கா.
4
சீர் அறி, சீர் அறி,சீயோனே, உன் மனதைஇந்த அந்தப் பக்கமாகசாய ஏவும் ஆவியைபின் செல்லாதிருப்பாயாகநேரே போ, யாவையும் நன்றாய் நீசீர் அறி, சீர் அறி.
5
தேறிப்போ, தேறிப்போ,சீயோனே, பலப்படு;மற்றோர் போலே செத்திராதேகிறிஸ்துக்குள் செழித்திரு.மாயம் வேஷமும் போதாதேஜீவனும் பலமும் வேண்டாமோ?தேறிப்போ, தேறிப்போ.