பாமாலை · Hymn245
பாலரே ஓர் நேசர் உண்டு
There's a Friend for little children
1
பாலரே ஓர் நேசர் உண்டுவிண் மோட்ச வீட்டிலேநீங்கா இந்நேசர் அன்புஓர் நாளும் குன்றாதே;உற்றாரின் நேசம் யாவும்நாள் செல்ல மாறினும்,இவ்வன்பர் திவ்விய நேசம்மாறாமல் நிலைக்கும்.
2
பாலரே, ஓர் வீடு உண்டுவிண் மோட்ச நாட்டிலேபேர் வாழ்வுண்டாக இயேசுஅங்கரசாள்வாரே;ஒப்பற்ற அந்த வீட்டைநாம் நாட வேண்டாமோ?அங்குள்ளோர் இன்ப வாழ்வில்ஓர் தாழ்ச்சிதானுண்டோ?
3
பாலரே ஓர் கிரீடம் உண்டுவிண் மோட்ச வீட்டில் நீர்நல் மீட்பரின் பேரன்பால்பொற் கிரீடம் அணிவீர்;இப்போது மீட்பைப் பெற்றுமா நேசர் பின்சென்றார்,இவ்வாடா ஜீவ கிரீடம்அப்போது சூடுவார்.
4
பாலரே, ஓர் கீதம் உண்டுவிண் மோட்ச வீட்டிலே;மா ஜெய கீதம் பாடஓர் வீணையும் உண்டே;அந்நாட்டின் இன்பம் எல்லாம்நம் மீட்பர்க்குரிமை,நீர் அவரிடம் வாரும்,ஈவார் அவ்வின்பத்தை.