பாமாலை · Hymn249

நல் மீட்பர் பட்சம்

Stand up stand up for Jesus

Projector

Lyrics

1
நல் மீட்பர் பட்சம் நில்லும்!ரட்சணிய வீரரே!ராஜாவின் கொடியேற்றிபோராட்டம் செய்யுமே!சேனாதிபதி இயேசுமாற்றாரை மேற்கொள்வார்;பின் வெற்றி கிரீடம் சூடிசெங்கோலும் ஓச்சுவார்.
2
நல் மீட்பர் பட்சம் நில்லும்!எக்காளம் ஊதுங்கால்,போர்க்கோலத்தோடு சென்றுமெய் விசுவாசத்தால்அஞ்சாமல் ஆண்மையோடேபோராடி வாருமேன்!பிசாசின் திரள்சேனைநீர் வீழ்த்தி வெல்லுமேன்.
3
நல் மீட்பர் பட்சம் நில்லும்!எவ்வீர சூரமும்நம்பாமல், திவ்விய சக்திபெற்றே பிரயோகியும்!சர்வாயுதத்தை ஈயும்கர்த்தாவை சாருவீர்;எம்மோசமும் பாராமல்முன் தண்டில் செல்லுவீர்.
4
நல் மீட்பர் பட்சம் நில்லும்!போராட்டம் ஓயுமே;வெம்போரின் கோஷ்டம், வெற்றிபாட்டாக மாறுமே!மேற்கொள்ளும் வீரர் ஜீவபொற் கிரீடம் சூடுவார்;விண் லோக நாதரோடேவீற்றரசாளுவார்.
249 நல் மீட்பர் பட்சம் — Tamil Pamalai