பாமாலை · Hymn252
என்றென்றும் ஜீவிப்போர்
Immortal Invisible God only wise
1
என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்,எட்டா ஒளியில் உள்ளோர் சர்வ ஞானர்,மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
2
ஓய்வோ துரிதமோ இன்றி ஒளி போல்,ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்,வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்.
3
பேருயிர் சிற்றுயிர் ஜீவன் தேவரீர்,யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன் நீர்,மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம்,உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.
4
மா மாட்சி பிதா, தூய ஜோதி தந்தாய்!தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்துதிப்போம், மகத்தாய்க் காணத் தோற்றுவீர்,கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.