பாமாலை · Hymn306

தூய்மை பெற நாடு

Take time to be Holy

Projector

Lyrics

1
தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமேநிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.
2
தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்தனித்திரு நாளும் அவர் பாதத்தில்யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரைபார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.
3
தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்தஎன்ன நேரிட்டாலும், அவர் பின் செல்லஇன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரைநோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை
4
தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்துசிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.
306 தூய்மை பெற நாடு — Tamil Pamalai