பாமாலை · Hymn251

உன்னதமான ஸ்தலத்தில்

Jehovah, God, Thy gracious power

Projector

Lyrics

1
உன்னதமான ஸ்தலத்தில்மா ஆழமுள்ள இடத்தில்,கர்த்தாவே, நீர் இருக்கிறீர்,எல்லாவற்றையும் பார்க்கிறீர்.
2
என் அந்தரங்க எண்ணமும்உமக்கு நன்றாய்த் தெரியும்;என் சுகதுக்கம் முன்னமேநீர் அறிவீர் என் கர்த்தரே.
3
வானத்துக்கேறிப் போயினும்பாதாளத்தில் இறங்கினும்,அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்,தப்பாமல் கண்டுபிடிப்பீர்.
4
காரிருளில் ஒளிக்கினும்,கடலைத் தாண்டிப் போயினும்எங்கே போனாலும் தேவரீர்அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்.
5
ஆராய்ந்து என்னைச் சோதியும்,சீர்கேட்டை நீக்கி ரட்சியும்,நல்வழி தவறாமலேநடத்தும் எந்தன் கர்த்தரே.
251 உன்னதமான ஸ்தலத்தில் — Tamil Pamalai