பாமாலை · Hymn259

இயேசுவே நீர் தாமே

Jesu meine Freude

Projector

Lyrics

1
இயேசுவே நீர் தாமேஎன் மகிழ்ச்சியாமேநீர் என் பூரிப்புஎன் மனம் நாள் தோறும்ஆசை வாஞ்சையோடும்உம்மை நோக்குதுகர்த்தரே உலகிலேஉம்மையன்றி வாழ்விராதுஇன்பமும் காணாது.
2
நல்மறைவின் கீழேநான் ஒதுங்க நீரேஎன் அரண்மனைசாத்தான் வரமிக்கட்டும்எதிரி சீறட்டும்இயேசு என் துணைதிகிலும் பயங்களும்பாவ நரகக் கெடியும்இயேசுவால் தணியும்.
3
வலு சர்ப்பத்துக்கும்சாவின் பற்களுக்கும்நான் திடுக்கிடேன்லோகமே விரோதிநான் சங்கீதம் ஓதிதோத்தரிக்கிறேன்தெய்வ கை என் சலுகைஇனிச் சாத்தான் கூட்டத்தார்கள்மௌனம் அடைவார்கள்
4
பொக்கிஷங்கள் யாவும்வேணும் விருதாவும்இயேசு என் கதிலோகத்தார் இச்சிக்கும்வாழ்வு குமிழிக்கும்கானற்கும் சரிஅதை ஏன் தொடருவேன்இயேசுவோடடைந்த தாழ்வுபெரிதான வாழ்வு
5
மனதே நீ ஆறுபூரிப்பாக பாடுஇயேசு சேர்ந்தாரேஅத்தால் எந்தப்பாடும்தித்திப்பாக மாறும்நான் உலகிலேநிந்தையும் நிர்ப்பந்தமும்உத்தரித்தும் இயேசு தாமேஎன் மகிழ்ச்சியாமே
259A இயேசுவே நீர் தாமே · Bavarian 96 — Tamil Pamalai