பாமாலை · Hymn667
நித்திரை செய்யாமல்
Watchful Shepherd guarding
1
நித்திரை செய்யாமல்ஆட்டைத் தீங்கில்லாமல்காக்கும் மேய்ப்பரேஎன்னையும் கடந்த பகலில் அனந்தஅன்பாய்க் காத்தீரேராவிலும் பார்த்தருளும்தேவ தூதர் காவலையும்என்னண்டையில் வையும்
2
நான் பயப்படாமல்சஞ்சலமில்லாமல்இளைப்பாற நீர்என் அறையைப் பூட்டும்இந்தக் குஞ்சைக் கூட்டும்தேவ செட்டைக் கீழ்அப்போதான் என்னைச் சாத்தான்பீறத் தேடியும், அடியேன்அஞ்சித் தத்தளியேன்
3
அடியேனை இன்றுபடுக்கையினின்றுநீர் அழைப்பீரோதேவரீரின் சித்தம்நல்லதென்று நித்தம்சொல்லுவேன் இதோஇப்போதே என் மீட்பரேஉம்மண்டை வழி நடத்தும்மரணம் வரட்டும்
4
நித்திரைக்கிப்போதுநான் சந்தோஷத்தோடுகண்ணை மூடுவேன்உமக்காவியையும்தேகம் உயிரையும்ஒப்புவிக்கிறேன்தேவரீர் கண் விழிப்பீர்காலை நான் பிழைத்தால் நீரேபாதுகாத்தாள்வீரே.