பாமாலை · Hymn328

அஞ்சாதிரு என் நெஞ்சமே

Fresch auf mein Seel verzage nicht

Projector

Lyrics

1
அஞ்சாதிரு என் நெஞ்சமேஉன் கர்த்தர் துன்ப நாளிலேகண் பார்ப்போம் என்கிறார்இக்கட்டில் திகையாதிருதகுந்த துணை உனக்குதப்பாமல் செய்குவார்.
2
தாவீதும் யோபும் யோசேப்பும்அநேக நீதிமான்களும்உன்னிலும் வெகுவாய்கஸ்தி அடைந்தும், பக்தியில்வேரூன்றி ஏற்ற வேளையில்வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.
3
கருத்தாய் தெய்வ தயவைஎப்போதும் நம்பும் பிள்ளையைசகாயர் மறவார்;மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்இரக்கமான கரத்தால்அணைத்து பாலிப்பார்.
4
என் நெஞ்சமே மகிழ்ந்திருபேய், லோகம் துன்பம் உனக்குபொல்லாப்புச் செய்யாதேஇம்மானுவேல் உன் கன்மலைஅவர்மேல் வைத்த நம்பிக்கைஅபத்தம் ஆகாதே.
328 அஞ்சாதிரு என் நெஞ்சமே — Tamil Pamalai