பாமாலை · Hymn329
அருள் நாதா நம்பி
I am trusting Thee Lord Jesus
Christian Lifeகிறிஸ்தவ வாழ்க்கைMeter8.5.8.3TuneBullingerFour-part recording · scoreதமிழ் இசைக் குறிப்பு · Tamil score
1
அருள் நாதா நம்பி வந்தேன்நோக்கக் கடவீர்கைமாறின்றி என்னை முற்றும்ரக்ஷிப்பீர்.
2
தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில்.
3
தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்தி செய்வீர் மாசில்லாதரத்தத்தால்.
4
துணை வேண்டி நம்பி வந்தேன்பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர்.
5
சக்தி வேண்டி நம்பி வந்தேன்ஞானம் பெலனும்அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும்.
6
இயேசு நாதா, நம்பி வந்தேன்தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.
Score · இசைக் குறிப்பு
Draft · notes match the recordingHear
Played by the computer from the notes, so it keeps exact time at any speed. Tap a note to start there; mute a voice or pick your part to hear it above the others. To hear the singers, use the practice player. The printed sheet is still here: PDF.
This score was read from the printed sheet by computer and the Tamil words were placed under the notes automatically; its notes agree with the part recordings. A musician has not checked it yet, so a note or a word may be out of place — the PDF is the reference. Report a mistake