பாமாலை · Hymn331

இம்மானுவேலின் இரத்தத்தால்

There is a fountain filled with blood

Projector

Lyrics

1
இம்மானுவேலின் இரத்தத்தால்நிறைந்த ஊற்றுண்டேஎப்பாவத்தீங்கும் அதனால்நிவிர்த்தியாகுமே.
2
மா பாவியான கள்ளனும்அவ்வூற்றில் மூழ்கினான்மன்னிப்பும் மோக்ஷானந்தமும்அடைந்து பூரித்தான்.
3
அவ்வாறே நானும் இயேசுவால்விமோசனம் பெற்றேன்என் பாவம் நீங்கிப் போனதால்ஓயாமல் பாடுவேன்.
4
காயத்தில் ஓடும் ரத்தத்தைவிஸ்வாசத்தால் கண்டேன்ஒப்பற்ற மீட்பர் நேசத்தைஎங்கும் பிரஸ்தாபிப்பேன்.
5
விண் வீட்டில் வல்ல நாதரைநான் கண்டு பூரிப்பேன்எந்தனை மீட்ட நேசத்தைகொண்டாடிப் போற்றுவேன்
331 இம்மானுவேலின் இரத்தத்தால் — Tamil Pamalai