பாமாலை · Hymn348
நான் பலவீன தோஷியாம்
So weak am I O gracious Lord
1
நான் பலவீன தோஷியாம்,நீர் தயாமூர்த்தியே;நின் பாதத் தூளும் மேலிடும்நிர்ப்பந்த நீசனே.
2
எப்பாவம் வெட்கம் எட்டிடாஏகாந்த ஜோதியே,எம் பாவம் நிந்தை தாங்கினீர்என் சொல்வேன் அன்பையே!
3
பிதாவின் மாட்சி ஆசனம்அபாத்திர பாவிக்காய்சுதா, நீர் நீத்து மாந்தர் தம்சரீரம் எடுத்தீர்.
4
கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்சகித்தீர் சாந்தமாய்;ஐயா, எந்நாமம் சாற்ற உம்பொறுமை தூய்மைக்கே!
5
அன்பே, நீர் மாந்தன் ஆக்கினீர்என் அன்பைப் பெற்றிட;நான் பாவி தோஷி வெட்கத்தால்முன்னின்ற்கத் துணியேன்.
6
உம் தயை அன்பால் மட்டுமேநான் பாத்திரன் ஆயினேன்;உன் தாசர் காக்கும் வண்ணமேகாப்பீர் நீர் என்னையும்.