பாமாலை · Hymn387

ஆ என்னில் நூறு வாயும்

O dass ich tausend zungen Hatte

Projector

Lyrics

1
ஆ என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால் கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்துதுதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன்.
2
என் சத்தம் வானமளவாகபோய் எட்ட வேண்டும் என்கிறேன்;கர்த்தாவைப் போற்ற வாஞ்சையாகஎன் ரத்தம் பொங்க ஆசிப்பேன்;ஒவ்வொரு மூச்சும் நாடியும்துதியும் பாட்டுமாகவும்.
3
ஆ, என்னில் சோம்பலாயிராதே,என் உள்ளமே நன்றாய் விழி;கர்த்தாவை நோக்கி ஓய்வில்லாதேகருத்துடன் இஸ்தோத்திரி;இஸ்தோத்திரி, என் ஆவியே,இஸ்தோத்திரி, என் தேகமே.
4
வனத்திலுள்ள பச்சையானஎல்லா வித இலைகளே,வெளியில் பூக்கும் அந்தமானமலர்களின் ஏராளமே,என்னோடே கூட நீங்களும்அசைந்திசைந்து போற்றவும்.
5
கர்த்தாவால் ஜீவன் பெற்றிருக்கும்கணக்கில்லா உயிர்களேபணிந்து போற்ற உங்களுக்கும்எந்நேரமும் அடுக்குமே;துதியாய் உங்கள் சத்தமும்ஓர்மித் தெழும்பி ஏறவும்.
387A ஆ என்னில் நூறு வாயும் · Augsburg — Tamil Pamalai