பாமாலை · Hymn390
லோக நாதா மண்ணோர்
Lord of glory Who has bought us
1
லோகநாதா, மண்ணோர் மீளஉந்தன் ரத்தம் சிந்தினீர்;கெட்டுப்போனோர் என்றும் வாழஉம்மைப் பலியாக்கினீர்.நன்றி கெட்ட மாந்தர்க்கென்றும்தயவாகத் தேவரீர்எண்ணிறந்த நன்மை சற்றும்கைமாறின்றி ஈகிறீர்.
2
உந்தன் நேசக் காந்தியாலும்எங்கள் நெஞ்சுருகியேஅன்பில்லாத தன்மை யாவும்நீங்கச்செய்யும், இயேசுவேஅதால் நாங்கள் ஏற்பதிலும்ஈதல் நன்றென்றுணர்வோம்நீரே தந்த ஆஸ்தியிலும்தான தர்மம் செய்குவோம்.
3
சிறியோர்க்குச் செய்த நன்மைஉமக்கிட்ட தர்மமேஎன்றந்நாள் நீர் சொல்லும் வாக்கைகேட்பதின்ப பாக்கியமேசொத்து செல்வம் ஏதும் அற்றஎளியோரால் தேவரீர்தான தர்மம் கேட்பதாகஇதினாலே போதித்தீர்.
4
லோக நாதா, மண்ணோர் மீளஉந்தன் ரத்தம் சிந்தினீர்;கெட்டுப்போனோர் என்றும் வாழஉம்மைப் பலியாக்கினீர்உம்மை அண்டிப் பற்றிக்கொள்ளநம்பிக்கை விஸ்வாசமும்மா சிறந்த மேன்மையுள்ளதிவ்விய அன்பும் ஈந்திடும்.