பாமாலை · Hymn391
விண் மண்ணை ஆளும்
O Lord of heaven and Earth
1
விண் மண்ணை ஆளும் கர்த்தரே,எவ்வாறு உம்மை நேசித்தேதுதிப்போம்? நன்மை யாவுமேநீர் ஈகிறீர்.
2
உம் அன்பைக் கூறும் மாரியும்,வெய்யோனின் செம்பொன் காந்தியும்,பூ, கனி, விளை பயிரும்,எல்லாம் ஈந்தீர்.
3
எம் ஜீவன், சுகம், பெலனும்,இல்வாழ்க்கை, சமாதானமும்,பூலோக ஆசீர்வாதமும்எல்லாம் ஈந்தீர்.
4
சீர்கெட்ட மாந்தர் மீள நீர்உம் ஏசு மைந்தனைத் தந்தீர்மேலும் தயாள தேவரீர்எல்லாம் ஈந்தீர்.
5
தம் ஜீவன், அன்பு, பெலனைஏழாம் மா நல் வரங்களைபொழியும் தூய ஆவியைஅருள்கிறீர்.
6
மன்னிப்பும் மீட்பும் அடைந்தோம்மேலான நம்பிக்கை பெற்றோம்பிதாவே பதில் என் செய்வோம்எல்லாம் ஈந்தீர்.
7
தன்னயம் நஷ்டமாகுமேஉமக்களிக்கும் யாவுமேகுன்றாத செல்வம் கர்த்தரேஎல்லாம் ஈந்தீர்.
8
தர்மத்தைக் கடன் என்பதாய்பதில் ஈவீர் பன்மடங்காய்இக்காணிக்கையைத் தயவாய்ஏற்றுக்கொள்வீர்.
9
உம்மாலே பெற்றோம் யாவையும்தர்மத்தைச் செய்ய ஆசையும்உம்மோடு நாங்கள் வாழவும்அருள் செய்வீர்.