பாமாலை · Hymn395
புல்லைப்போல் எல்லாரும்
Alle Menschen mussen sterben
1
புல்லைப் போல் எல்லாரும் வாடிபோறோம் சாகார் இல்லையே;சாவில்லாமல் சீரும் மாறிபுதிதாகக் கூடாதே;நீதிமான்கள் பரலோகவாழ்வின் மகிமைக்குப் போகஇச்சரீரப் பாடெல்லாம்முன் அழியத் தேவையாம்.
2
ஆகையால் சந்தோஷமாகஸ்வாமி கேட்கும் வேளையில்நானும் போறேன், இதற்காகதுக்கமில்லை; ஏனெனில்எனக்காய்க் குத்துண்டிறந்தஇயேசுவால் மன்னிப்பைக்கண்டஎனக்கவர் காயங்கள்சாவில் போந்த ஆறுதல்.
3
இயேசு எனக்காய் மரித்தார்அவர் சாவென் லாபமாம்,எனக்கு ரட்சிப்பளித்தார்;ஆகையால் சிங்காரிப்பாம்;மேன்மை தெய்வ மண்டலத்தைச்சேர்ந்து, ஏக திரித்துவத்தைநித்தம் பார்க்க மண்ணை நான்விட்டுப்போக ஆசைதான்.
4
அங்கே மெய்ச் சந்தோஷம் உண்டு,அங்கே கோடி நீதியர்வான ஜோதியால் சூழுண்டு,அப்போதே கொண்டாடுவர்,தூதரோடொன்றாய்க் குலாவி,ஆ, பிதா குமாரன் ஆவி,தூய தூய தூயரேஎன்று பாடுவார்களே
5
அங்கே கோத்திரப் பிதாக்கள்ஞான திஷ்டிப் புருஷர்,இயேசு ஸ்வாமியின் சீஷர்கள்என்றும் வாசம் பண்ணுவார்.அவ்விடம் சன்மார்க்கத்தார்கள்ஒன்றாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.அங்கே என்றும் ஓதியஇன்பச் சொல் அல்லேலூயா.
6
அந்த மோட்ச மகிமையைஅப்போதே கண்ணோக்கினேன்வானவரின் வெண்ணுடையைப்பெற்று, பூண்டு கொள்ளுவேன்நான் பொற் கிரீடத்தைத் தரிக்கமாளா வாழ்வுமாய்க் கெலிக்க,ஸ்வாமி ஆசனத்துக்குசேரும் வேளை வந்தது.