பாமாலை · Hymn397

ஓ எருசலேமியாரே

Wake awake for night is flying

Projector

Lyrics

1
ஓ, எருசலேமியாரேவிழியுங்கள் மெய்மார்க்கத்தாரேஇப்பாதி ராத்திரியிலேபர்த்தா வாறார்; வேகமாகஎழுந்திருங்கள் புத்தியாகஇருக்கும் கன்னிகள் எங்கே?தீவர்த்திகளையேஎடுத்தெதிர்கொண்டேபோம் நேரமாம்,என்றிரவில் அலங்கத்தில்நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.
2
சீயோனாகிய மனைவிசந்தோஷம் மனதில் பரவிவிழித்தெழுந்திருக்கிறாள்அவள் நேசர் மேன்மையோடும்சிநேகத்தோடும் தயவோடும்வெளிப்படுகிறதினால்கிலேசம் நீங்கிற்று;ஆ ஸ்வாமீ, உமக்குஓசியன்னா!அடியாரும் கம்பீரிக்கும்கதிக்குச் செல்வோமே, கர்த்தா.
3
சுரமண்டலங்களாலும்,நரர் சுரர்கள் நாவினாலும்,துதிக்கப்பட்டோர் தேவரீர்மோட்சலோகம் மா சிறப்புநீர் எங்களை வானோர்களுக்குஒப்பானோராக மாற்றுவீர்அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?காதாலே கேட்டோர் ஆர்?நாங்கள் மகாசந்தோஷமும் மகிழ்ச்சியும்அடைகிறோம்; அல்லேலூயா!
397 ஓ எருசலேமியாரே — Tamil Pamalai