பாமாலை · Hymn401

என்றும் கர்த்தாவுடன்

For ever with the Lord

Projector

Lyrics

1
என்றும் கர்த்தாவுடன்நான் கூடி வாழுவேன்இவ்வாக்கினால் சாகா வரன்செத்தாலும் ஜீவிப்பேன்பற்றாசையால் உம்மைவிட்டே நான் அலைந்தேன்நாடோறும் வழி நடந்தேவிண் வீட்டைக் கிட்டுவேன்
2
அதோ சமீபமேபிதாவின் வீடுதான்என் ஞானக்கண்கள் காணுமேமின்னும் பொன்னகர் வான்தூயோர் சுதந்தரம்நான் நேசிக்கும் நாடேஎன் ஆவி மேலெருசலேம்சேரத் தவிக்குமே
3
கர்த்தாவுடன் என்றும்பிதாவே இங்கும் நீர்இவ்வாக்கை நிறைவேற்றவும்சித்தம் கொண்டருள்வீர்என் பக்கம் தங்கிடின்தப்பாமலே நிற்பேன்கைதூக்கி என்னைத் தாங்கிடின்போராடி வெல்லுவேன்
4
என் ஜீவன் போகும் நாள்கிழியும் இத்திரைசாவை அழிப்பேன் சாவினால்சாகா உயிர் பெற்றேஎன் நாதரைக் காண்பேன்நின்று களிப்புடன்சிம்மாசனத்தின் முன் சொல்வேன்”என்றும் கர்த்தாவுடன்”.
401 என்றும் கர்த்தாவுடன் — Tamil Pamalai