பாமாலை · Hymn403
பரமண்டலத்திலுள்ள
Meines Lebens beste Freude
1
பரமண்டலத்திலுள்ளமகிமை என் ரம்மியம்இயேசு என்கிற அன்புள்ளரட்சகர் என் பொக்கிஷம்பரலோக நன்மைகள்என்னுடைய ஆறுதல்.
2
வேறே பேர் மண்ணாஸ்தியாலேதங்களைத் தேற்றட்டுமேன்நான் என் நெஞ்சை இயேசுவாலேதேற்றி விண்ணை நோக்குவேன்மண் அழியும், இயேசுவோஎன்றும் நிற்கிறார் அல்லோ
3
எனக்கவரில் மிகுந்தஆஸ்தி அகப்பட்டதுவிக்கினங்களால் சூழுண்டலோக ஆஸ்தி ஏதுக்கு?இயேசுதான் என் ஆத்துமம்தேடிய நற்பொக்கிஷம்
4
லோக இன்பத்தை ருசிக்கும்நூறு வருஷத்திலும்,இயேசுவோடு சஞ்சரிக்கும்ஒரு நாளே இங்கேயும்மேன்மையே; அங்கவரைசேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
5
எனக்கு மோட்சானந்தத்தில்பங்குண்டாக, இயேசுவே,நீர்தான் இவ்வனாந்தரத்தில்எனக்குத் துணையாமேஆ, நான் இன்றும் என்றைக்கும்உம்முடன் இருக்கவும்.