பாமாலை · Hymn402

ஓய்வுநாள் விண்ணில்

O what their joy and the glory must be

Projector

Lyrics

1
ஓய்வுநாள் விண்ணில் கொண்டாடுகின்றோர்பேரின்ப மேன்மை யார் கூற வல்லோர்?வீரர்க்கு கிரீடம், தொய்ந்தோர் சுகிப்பார்ஸ்வாமியே யாவிலும் யாவும், ஆவார்.
2
ராஜ சிங்காசன மாட்சிமையும்ஆங்குள்ளோர் வாழ்வும் சமாதானமும்இவை எல்லாம் கண்டறிந்தோரில் யார்அவ்வண்ணம் மாந்தர்க்கு நன்குரைப்பார்?
3
மெய் சமாதானத் தரிசனமாம்அக்கரை எருசலேம் என்போம் நாம்ஆசிக்கும் நன்மை கைகூடும் அங்கேவேண்டுதல் ஓர்காலும் வீண் ஆகாதே.
4
சீயோனின் கீதத்தைப் பாடாதங்கும்தடுக்க ஏலுமோ எத்தொல்லையும்?பேரருள் ஈந்திடும், ஆண்டவா, நீர்பக்தரின் ஸ்தோத்திரம் என்றும் ஏற்பீர்.
5
ஆங்குள்ளோர் ஓய்வுநாள் நித்தியமாம்,விடிதல் முடிதல் இல்லாததாம்தூதரும் பக்தரும் ஓயாமலேஓர் ஜெய கீர்த்தனம் பாடுவாரே
6
பாபிலோன் போன்ற இப்பாரின் சிறைமீண்டு, நம் தேசம் போய்ச்சேரும்வரை,எருசலேமை நாம் இப்பொழுதும்வாஞ்சித்து ஏங்கித் தவித்திடுவோம்.
7
தந்தையினாலும், குமாரனிலும்ஆவியின் மூலமும் யாவும் ஆகும்;திரியேக தெய்வத்தை விண் மண்ணுள்ளார்சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வாழ்த்திடுவார்.
402 ஓய்வுநாள் விண்ணில் — Tamil Pamalai