பாமாலை · Hymn406

மின்னும் வெள்ளங்கி

Ten thousand times ten thousand

Projector

Lyrics

1
மின்னும் வெள்ளங்கி பூண்டுமீட்புற்ற கூட்டத்தார்பொன்னகர் செல்லும் பாதையில்பல் கோடியாய்ச் செல்வார்வெம் பாவம் சாவை இவர்வென்றார் போர் ஓய்ந்ததேசெம்பொன்னாம் வாசல் திறவும்செல்வார் இவர் உள்ளே.
2
முழங்கும் அல்லேலூயாமண் விண்ணை நிரப்பும்விளங்கும் கோடி வீணைகள்விஜயம் சாற்றிடும்,சராசரங்கள் யாவும்சுகிக்கும் நாள் இதே;இராவின் துன்பம் நோவுக்குஈடாம் பேரின்பமே.
3
அன்பான நண்பர் கூடிஆனந்தம் அடைவார்;மாண்பான நேசம் நீங்காதேஒன்றாக வாழுவார்;கண்ணீர் வடித்த கண்கள்களித்திலங்கிடும்மண்ணில் பிரிந்த உயிர்கள்மீளவும் சேர்ந்திடும்
4
சிறந்த உந்தன் மீட்பைசமீபமாக்குமேதெரிந்து கொள்ளப்பட்டவர்தொகை நிரப்புமே;உரைத்த உந்தன் காட்சிஉம்பரில் காட்டுவீர்இறைவா, ஏங்கும் தாசர்க்குஇறங்கி வருவீர்.
406 மின்னும் வெள்ளங்கி — Tamil Pamalai