பாமாலை · Hymn405
1
மா சாலேம் சொர்ண நாடுபால் தேனாய் ஓடிடும்உன் மேல் தவித்தே ஏங்கிஎன் உள்ளம் வாடிடும்ஆ என்ன என்ன மாட்சிபூரிப்பும் ஆங்குண்டேயார்தானும் கூற வல்லோர்உன் திவ்விய ஜோதியே?
2
சீயோன் நகரில் எங்கும்பூரிப்பின் கீதமாம்நல் ரத்தச் சாட்சி சேனைதூதரின் ஸ்தானமாம்கர்த்தராம் கிறிஸ்து ஆங்குமா ஜோதி வீசுவார்விண் மாட்சி மேய்ச்சல் காட்டிபக்தரைப் போஷிப்பார்.
3
கவலை தீர்ந்து காண்போம்தாவீதின் ஆசனம்விருந்தர் ஆர்ப்பரிப்பார்மா வெற்றி கீர்த்தனம்தம் மீட்பரைப் பின்சென்றுபோராடி வென்றனர்என்றென்றும் மாட்சியோடுவெண்ணங்கி பூண்டனர்.
4
ஆ, பாக்கிய திவ்விய நாடேஎன்றைக்கும் சேருவேன்!ஆ, பாக்கிய திவ்விய நாடேஉன் அருள் பெறுவேன்ஆ, சாம்பல் மண்ணாம் மாந்தர்கர்த்தாவைப் பெறுவார்ஆ, இன்றும் என்றும் மாந்தர்கர்த்தாவின் அடியார்!