பாமாலை · Hymn493

இயேசுவின் ரத்தத்தில்

And Can it be

Projector

Lyrics

1
இயேசுவின் ரத்தத்தில் நானும், நம்பிக்கை வைக்கக் கூடுமோ?எனக்காய் மரித்தவர்க்கு என்னிமித்தமே பாடுகள்;அற்புத அன்பு, ஆச்சரியம்!என் தேவன் எனக்காய் மாண்டார்
2
கல்வாரியில் சிலுவையில் மரித்தாரே என் ஆண்டவர்;இவ்வன்பின் ரகசியத்தை, யார் கண்டு உணரக் கூடும்?காருண்யரைத் துதித்திடுவோம்;இவ்வன்பரை நாம் போற்றுவோம்.
3
விண் சிங்காசனத்தை விட்டு ஆதாமின் வீழ்ந்த மாந்தர்க்காய்தம்மையே வெறுமையாக்கி, தம் ரத்தம் சிந்தினார் இயேசு;தாராளமான அன்பினால்,இப்பாவி என்னையும் கண்டார்!
4
பாவத்தில் கட்டப் பட்டோனாய், இருளில் மூழ்கி இருந்தேன்;உம் முகத்தின் பிரகாசத்தால், மெய் அறிவைக் கண்டடைந்தேன்!என் கட்டுகள் விழுந்திட, எழுந்து உம்மை பின் செல்வேன்.
5
ஆக்கினைத் தீர்ப்பெனக்கில்லை,என் இயேசு எனக்குச் சொந்தம்!அவராலே பிழைத்திட்டேன், நீதியின் ஆடை தரித்தேன்.தைரியமாய் அவர் முன் நிற்பேன், வாடாத கிரீடம் பெறுவேன்.
493A இயேசுவின் ரத்தத்தில் · Lansdown — Tamil Pamalai