பாமாலை · Hymn5
எல்லாம் சிஷ்டித்த நமது
Halleluia let praises ring (Halleluya Lob pretis)
1
எல்லாம் சிஷ்டித்த நமதுதயாபர பிதாவுக்குஅநந்த காலமாகஅல்லேலூயா! மகத்துவம்,பலம், புகழ்ச்சி, தோத்திரம்உண்டாய் இருப்பதாகபார்ப்பார், காப்பார்வல்லமையும் கிருபையும்அன்பும் எங்கும்அவர் செய்கையால் விளங்கும்.
2
மண் நீசருக்கு மீட்பரும்கர்த்தாவுமாம் சுதனுக்கும்ரட்சிப்பின் அன்புக்காகஅல்லேலூயா! புகழ்ச்சியும்அநந்த ராஜரீகமும்உண்டாய் இருப்பதாகபாவம், சாபம்எந்தத் தீங்கும் அதால் நீங்கும்,என்றென்றைக்கும்பாக்கியம் எல்லாம் கிடைக்கும்.
3
மனந்திருப்பி எங்களைபர்த்தாவாம் இயேசுவண்டையேஅழைத்து, நேர்த்தியாகசிங்காரிக்கும் தேவாவிக்கும்,அல்லேலூயா! புகழ்ச்சியும்வணக்கமும் உண்டாகவான, ஞானவாழ்வினாலும் செல்வத்தாலும்தேற்றிவாறார்அதின் முன் ருசியைத் தாறார்.
4
எல்லா சிஷ்டிகளாலேயும்பிதா குமாரன் ஆவிக்கும்அநந்த காலமாகஅல்லேலூயா! மகத்துவம்பலம், புகழ்ச்சி, தோத்திரம்உண்டாய் இருப்பதாகஆமேன், ஆமேன்!நீர் அநந்தம், ஆதியந்தம்,பரிசுத்தம்பரிசுத்தம், பரிசுத்தம்.