பாமாலை · Hymn7

கர்த்தாவைப் போற்றிப் பாடு

My soul now bless (Nun lob me in seel )

Projector

Lyrics

1
கர்த்தாவைப் போற்றிப் பாடு,என் ஆவியே என் உள்ளமேதெய்வன்பை நீ கொண்டாடுஅதை மறக்கலாகாதேஉன் பாவத்தை மன்னித்தார்,உன் கேட்டை நீக்கினார்உன் பிராணனை ரட்சித்தார்குணம் அளிக்கிறார்மகா இரக்கமானசகாயர் ஆண்டவர்ஒடுங்குண்டோருக்கானதுணை தயாபரர்.
2
தாம் ஆளும் நியாயத்தாலேமுன்னாள் முதல் வெளிப்பட்டார்உருக்க தயவாலேஅவர் நிறைந்திருக்கிறார்.சினத்தை என்றென்றைக்கும்வைக்கார்; மகா தயைதாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,அது விண்ணத்தனைஉயர்ந்ததாயிருக்கும்;கிழக்கு மேற்குக்குஇருக்கும் தூரத்துக்கும்மீறுதல் நீங்கிற்று.
3
தம் மைந்தருக்கன்புள்ளபிதா இரங்கும்போல் அவர்தமக்குப் பயமுள்ளசன்மார்க்கருங்கிரங்குவார்.நாம் இன்ன உருவென்றுநன்றாக அறிவார்,நாம் தூளும் மண்ணுமென்றுநினைத்திருக்கிறார்’நாம் புல்லைப்போல் வளர்ந்துபூப்போலே பூக்கிறோம்காற்றதின்மேல் கடந்துபோனால், உலர்ந்துபோம்.
4
ஆனால் தாம் நிர்ணயித்தஉடன்படிக்கைக் கேற்றதாய்நடந்து, தாம் கற்பித்தபடியே தெய்வ பயமாய்செய்தோர்மேல் என்றென்றைக்கும்கர்த்தாவின் கிருபைநீங்காததாய் நிலைக்கும்அவர்கள் நன்மையைவிசாரிக்கச் சமர்த்தர்பரத்தில் ஆள்பவர்,யாவற்றின்மேலும் கர்த்தர்உயர்ந்த அரசர்.
5
உற்சாக வேகமாகபண்செய்யும் தேவதூதரே,கர்த்தாவை நேர்த்தியாகதுதிப்பதுங்கள் வேலையேவிண்மண்ணில் எங்குமுள்ளமா சேனையாகியஎச் சிருஷ்டியும் அன்புள்ளகர்த்தாவைச் சகலவித வகையுமாகதுதிப்பதாகவே;கர்த்தாவைப் பக்தியாகதுதி, என் ஆவியே.
7 கர்த்தாவைப் போற்றிப் பாடு — Tamil Pamalai