பாமாலை · Hymn555

சூரியன் அணைந்திடும்

Soon will come the setting sun

Projector

Lyrics

பல்லவி
நாம் கண்டு சந்திப்போம்ஆம், நாம் கண்டு சந்திப்போம்;அவர் சாயல் அணிவோம்,அங்கு ஆனந்தங் கொள்வோம்,நாம் கண்டு சந்திப்போம்ஆம் நாம் கண்டு சந்திப்போம்;ஜோதியாய்ப் பிரகாசிப்போம்.
1
சூரியன் அணைந்திடும்வேகம் வேலை ஓய்ந்திடும்சோர்ந்த நெஞ்சின் ஓட்டம் நின்று போம்;விண், மண்ணாளும் ஆண்டவர்நம்மைத் தான் எழுப்புவார்;சீயோன் மலைமேல் நாம் சந்திப்போம்.
↻ பல்லவி
2
கார் முகில் தான் மூடுதேமாருதமும் மோதுதேவாசலண்டை புயல் கோரமாய்சோபை வீசும் நாட்டுக்கேஇயேசு பாதை காட்டவேமண்ணின் கொண்டல் அங்கு இல்லையாம்.
↻ பல்லவி
3
கண்ணீர் வழிந்தோடினும்புண்ணாய் நெஞ்சம் நோகினும்பூமியில் திகில்கள் மிகுந்தும்கர்த்தர் காலை தோன்றுவார்,வீட்டில் சேர்த்து வாழ்விப்பார்அங்கெம் துக்கம் அன்றே ஓய்ந்திடும்.
↻ பல்லவி
555 சூரியன் அணைந்திடும் — Tamil Pamalai