பாமாலை · Hymn618

பிதாவே உமதாவியை

God Father send Thy Holy Ghost

Projector

Lyrics

1
பிதாவே, உமதாவியைஅன்பாய் அனுப்பும் அவரைஅடியார்க் கீவாய்த் தாரும்ஜெபத்தில் உம்மை ரட்சகர்இவ்வீவைக் கேட்க சொன்னவர்இவர் முகத்தைப் பாரும்.
2
இவ்வரத்துக்கு மனிதர்அனைவரும் அபாத்திரர்;நீர் தயவாய்க் கொடுக்கும்தேவாவியின் வரமதுஅன்புள்ள ரட்சகரதுசம்பாதிப்பாயிருக்கும்.
3
சாத்தான் ஆதாமின் ஜாதியைக்கெடுத்து, தெய்வ சாயலைஎல்லாஞ் சமூலமாகமனிதர்க்குள் அழித்ததுஇவ்வேழைப் பாவிகளுக்குஇரக்கஞ் செய்வீராக.
4
கெட்டோம், நீரெம்மை ரட்சித்தீர்விழுந்தோம், மீட்புண்டாக்கினீர்இம்மீட்பை நாங்கள் பற்றும்மெய்யான விசுவாசமும்புதிய நற்குணமும்அடியாரில் வரட்டும்.
5
கசப்பைத் தித்திப்பாக்குவார்இருளில் ஒளி காண்பிப்பார்நல்லாறுதலை சொல்வார்.மந்தாரமான ராவிலேநாம் நம்பி சுகத்துடனேஇருக்கக் காத்துக் கொள்வார்.
6
இப்போதும் மா தயாபரா,அடியார் உம்மைக் கேட்கிறவிண்ணப்பத்தை அளியும்.நீர் மகா தூய ஆவியைத்தந்தவராலே எங்களைஅன்பாய் ஆசீர்வதியும்.
618 பிதாவே உமதாவியை — Tamil Pamalai