பாமாலை · Hymn616
கர்த்தாவின் தூய ஆவியே
O Holy Spirit enter in
1
கர்த்தாவின் தூய ஆவியேநீர் எங்கள் ஆன்மா தன்னிலேஇறங்கிவாசம் பண்ணும்பர வெளிச்சமாகியஉம்மாலே நாங்கள் சீர்ப்படதெளிந்த நெஞ்சுங் கண்ணும்தந்து, வந்து,மெய் ஜெபத்தை நற்குணத்தைப்போதிவியும்மெய் மகிழ்ச்சியை அளியும்.
2
நீர் போதிக்கும் நல் வார்த்தையேஎப்போதும் எங்கள் நெஞ்சிலேதீயாய் எரிவதாக.பிதா சுதன் இருவரால்இறங்கும் உம்மையும் அன்பால்மூவேக தெய்வமாகநல்ல, வல்லபக்தியோடும் பணிவோடும்போற்றிப் பாடும்வாழ்வை எங்களுக்குத் தாரும்.
3
நல்லோர் அடைகிற எல்லாமெஞ்ஞானத்துக்குங் காரணா,நீர் எங்கள் மேலே வாரும்.மற்றோர்க்கும் நல்ல வழியைஅன்பாகக் காட்டும் அறிவைநீர் எங்களுக்குத் தாரும்.நாட்டில், காட்டில்தேசமெங்கும் பொய் அடங்கும்நாள் உண்டாகஉம்மால் மெய் பலப்பதாக.
4
வழித்துணையாங் கர்த்தரே,நல் யோசனை அறியோமே,நீரே வழியைக் காட்டும்.எல்லாவிதத் துன்பத்திலும்திடம் நிலைவரத்தையும்அளித்துக் களைப்பாற்றும்,வாரும், பாரும்,கைசலித்துக் கட்டுவிட்டுப்போன யாவும்சீர்ப்பட ஒத்தாசை தாரும்.
5
பரத்தின் மதுரப் பனி,நீர் எங்கள் உள்ளத்துருகி,அன்பால் நிரம்பப் பண்ணும்.சகோதரர் ஒன்றாகியசிநேகத்தைக் கெடுக்கிறபொறாமையும் வன்கண்ணும்வாடி, மாறி,நல் இணக்கம் மெய் இரக்கம்நேசக்கட்டும்சாந்தம் அன்பும் வளரட்டும்.