பாமாலை · Hymn617

அடியார் நெஞ்சைத் தயவாய்

Come God creator Holy Ghost

Projector

Lyrics

1
அடியார் நெஞ்சை தயவாய்நிரப்பி அதை உமக்கேபொருந்தும் அலங்காரமாய்படையும் தேவ ஆவியே.
2
மெய்த் தேற்றரவளிக்கிறபர ஈவாயிருக்கிறீர்;வானாபிஷேகமாகியஜீவாறும் நேசத் தீயும் நீர்.
3
பல வரம் வழங்கியநீர் இயேசுவினது விரல்;தெய்வீக சொல் புறப்படஉம்மால் தெரியும் மொழிகள்.
4
வெளிச்சந் தாரும் அறிவில்மெய்யன்பை நெஞ்சிலே கொடும்சரீர பலவீனத்தில்பலம் உண்டாக்கியருளும்.
5
அடியார் எச்சரிக்கையாய்நீர் ஏவும்போல் நடக்கவேபிசாசின் சூதைத் தூரமாய்விலக்கும், மனவாசரே.
6
பிதா சுதனையும் நன்றாய்அறிந்து அண்டிக்கொள்ளவே,நீர் எங்கள் தெய்வ குருவாய்இரும், இருவர் ஆவியே.
7
மூவேக தெய்வமாகியபிதா குமாரன் ஆவிக்கும்இப்போதென்றைக்குஞ் சகலபுகழ்ச்சியும் உண்டாகவும்.
617 அடியார் நெஞ்சைத் தயவாய் — Tamil Pamalai