பாமாலை · Hymn636
பிதாவாம் கர்த்தர் பேரிலே
We all believe in one true God
1
பிதாவாங் கர்த்தர் பேரிலேஏக விசுவாசமாகஇருக்கிறோம், எங்களையேநேசித்தெங்கள் நன்மைக்காகவிண்மண் யாவையும் படைத்தார்.ஆவி தேக்த்தையுந் தந்தார்ஊண் உடுப்பையும் அளித்தார்,மிகவும் இரங்கி வந்தார்,அவர் மகா தயாபரர்,சர்வத்திற்கும் மா வல்லவர்.
2
ஒன்றான தேவ மைந்தனும்எங்கள் ஆண்டவருமானஅன்புள்ள இயேசு க்றிஸ்தையும்நாங்கள் நெஞ்சின் பக்தியானவிசுவாசமாய்த் துதித்துதோத்திரிக்கிறோம்; தாழ்வானஎங்கள் உருவாய் உதித்துபாடுபட்டிகழ்ச்சியானமரத்தில் மாண்டு, மூன்றாம் நாள்உயிர்த்தார் தெய்வ பலத்தால்
3
தேவாவியானோர் பேரிலும்நாங்கள் விசுவாசமானோர்,இருவரோடே அவரும்ஏகத் தேவத் தன்மையானோர்,அவர் ஆளும் மெய் சபையும்நீதியரின் ஒருமிப்பும்,ஐக்யமும் உறவுகளும்பாவிகளுக்கு மன்னிப்பும்,மாண்டோர் உயிர்த்தெழுதலும்உண்டே மெய் வாழ்வின் ஜீவனும்.