பாமாலை · Hymn634
என் இயேசுவே உம்மாலே
Lord Jesus Thou my glory
1
என் இயேசுவே உம்மாலேநான் மீட்கப்பட்டதாலேநான் பூரிப்பால் நிறைந்தேன்,பேரின்பத்தை அடைந்தேன்.
2
உம்மால் நான் வாழ என்றும்இப்பந்தியில் நீர் ஈயும்ஞானத் திரவியங்கள்பரத்தின் நற்செல்வங்கள்.
3
இவ்வேழைக்கும் இருக்கும்பசிக்குந் தாகத்துக்கும்நம் பூரணத்தைத் தந்தீர்,நீர் என்னைத் தேற்ற வந்தீர்.
4
மா பாடுகளினாலும்அகோர வாதையாலும்நீர் என் கடனைத் தீர்த்தீர்,அத்தால்தான் என்னை மீட்டீர்.
5
மகா கூக்குரலோடும்ரத்தமும் வேர்வையோடும்கண்ணீரும்விட்டு, நீரேஎன்னை விடுவித்தீரே.
6
என் பாவங்களை மூடநீரே இத்தோடுங்க்கூடமரித்தீர், இதற்காகத்துதி உமக்குண்டாக.