பாமாலை · Hymn83

நீர் தந்த நன்மை

When all Thy mercies O my God

Projector

Lyrics

1
நீர் தந்த நன்மை யாவையும்நினைத்து, கர்த்தரே,மகிழ்ச்சியோடு என்றைக்கும்நான் துதி செய்யவே.
2
குழந்தைப் பருவமுதல்குறைவில்லாமலேஎனக்களித்த நன்மைகள்ஏராளமானதே.
3
என்னோடு வாலிபத்திலும்இருந்தீர் தேவரீர்இக்கட்டுண்டான காலத்தும்விழாமல் தங்கினீர்.
4
அநேகமான தீமைகள்அண்டாமல் தடுத்தீர்கைம்மாறில்லாத நன்மைகள்கர்த்தாவே பொழிந்தீர்.
5
இம்மையில் என்றும் தாழ்மையாய்தெய்வன்பை நினைப்பேன்;மறுமையில் வணக்கமாய்உம்மையே போற்றுவேன்.
6
புகழ்ச்சி, துதி, தோத்திரம்ஒன்றான உமக்கேஇகத்திலும் பரத்திலும்எழும்பத் தகுமே.
83 நீர் தந்த நன்மை — Tamil Pamalai