பாமாலை · Hymn81
வருஷப் பிறப்பாம் இன்று
Hilf Herr Jesu lass gelingen
1
வருஷப் பிறப்பாம் இன்றுபுது பக்தியுடனேதேவரீரிடத்தில் வந்துவாழ்த்தல் செய்ய இயேசுவேஉந்தன் ஆவியை அளித்துஎன்னைப் பலப்படுத்தும்அடியேனை ஆதரித்துவழிகாட்டியாய் இரும்
2
இது கிருபை பொழியும்வருஷம் ஆகட்டுமேன்என்னில் ஒளி வீசச்செய்யும்என் அழுக்கை அடியேன்முழுவதும் கண்டறிந்துஅருவருக்கச் செய்யும்பாவம் யாவையும் மன்னித்துநற்குணத்தை அளியும்
3
நீர் என் அழுகையைக் கண்டுதுக்கத்தாலே கலங்கும்அடியேனைத் தேற்றல் செய்துதிடன் அளித்தருளும்இந்த புது வருஷத்தில்பாவத்துக்கும் கேட்டுக்கும்தப்புவித்து என்னிடத்தில்கிருபை கூர்ந்தருளும்
4
மாயமற்ற கிறிஸ்தோனாகஇந்த வருஷத்திலேநான் நடக்கத்தக்கதாகஈவளியும் கர்த்தரேயாவர்மேலும் அன்பின் சிந்தைவைத்து தெய்வ பக்தியைஎனக்கு ரட்சிப்புண்டாககாண்பித்திருப்பேனாக
5
பூரிப்பாய் இவ்வருஷத்தைநான் முடிக்க என்னை நீர்தாங்கி உந்தன் திருக் கையைஎன்மேல் வைக்கக்கடவீர்வருத்தம் வந்தாலும் உம்மைநம்பிப் பற்றிக்கொள்ளுவேன்மரித்தாலும் பேரின்பத்தைநான் அடைந்து வாழுவேன்