பாமாலை · Hymn86
விடியற்காலத்து வெள்ளியே
Brightest and best of the starts
1
விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;உதய நக்ஷத்திரமே, ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.
2
தண் பனித் துளிகள் இலங்கும் போது,முன்னணையில் அவர் தூங்குகின்றார்;வேந்தர், சிருஷ்டிகர், நல் மீட்பர் என்றுதூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்.
3
ஏதோமின் சுகந்தம், கடலின் முத்து,மலையின் மாணிக்கம் உச்சிதமோ?நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்துதங்கமுடன் படைத்தல் தகுமோ?
4
எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்,மீட்பர் கடாசஷம் பெறல் அரிதே;நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்;ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.
5
விடியற்காலத்து வெள்ளியே, தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்;உதய நக்ஷத்திரமே, ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்.